பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும்

Added : நவ 18, 2020
Share
Advertisement
சிவகங்கை : அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த, மருத்துவ அதிகாரிகள், டாக்டர், சுகாதார பணியாளர்கள் பாடுபட வேண்டும்,'' என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கையில் கலெக்டர் தலைமையில் மருத்துவம், சுகாதாரம், குடும்ப நலம், தொழுநோய் பிரிவு உள்ளிட்ட மருத்துவத்துறை ஆலோசனை கூட்டம் நடந்தது. அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள்,

சிவகங்கை : அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த, மருத்துவ அதிகாரிகள், டாக்டர், சுகாதார பணியாளர்கள் பாடுபட வேண்டும்,'' என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் கலெக்டர் தலைமையில் மருத்துவம், சுகாதாரம், குடும்ப நலம், தொழுநோய் பிரிவு உள்ளிட்ட மருத்துவத்துறை ஆலோசனை கூட்டம் நடந்தது. அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள், மருத்துவ இணை இயக்குனர் இளங்கோமகேஸ்வரன், துணை இயக்குனர்கள் (சுகாதாரம்) யசோதாமணி, (குடும்பநலம்) யோகவதி, சித்தா மாவட்ட அலுவலர் பிரபாகரன் பங்கேற்றனர்.கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசுகையில், ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை அனைத்து இடங்களிலும் நோயாளிகள்பயன்படுத்தும் கழிப்பறையை சுத்தமாகவைத்திருக்க வேண்டும்.

டாக்டர், நர்சு, சுகாதார பணியாளர்கள் நோயாளிகளிடம் கனிவாக பேசி, சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போது தான் அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். தனியாருக்கு நிகராக அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த பாடுபட வேண்டும். தொடர்ந்து இரவு, பகல் எந்நேரத்திலும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளை பார்வையிட வருவேன். உரிய மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின்னரே ஆய்வு செய்வேன். அதற்கேற்றபடி மருத்துவமனைகளை தரம் உயர்த்தியிருக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X