சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 2884 வழக்குகள்

Added : நவ 18, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 2884 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகவேகத்தில் சென்றதாக 26 வழக்குகள், அலைபேசியில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக 285, சிக்னல் விதி மீறியதற்காக 55, மது அருந்தி வாகனம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 2884 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகவேகத்தில் சென்றதாக 26 வழக்குகள், அலைபேசியில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக 285, சிக்னல் விதி மீறியதற்காக 55, மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 3, அதிக பொருட்களை ஏற்றி வந்ததாக 5 வழக்குகள் பதிவாகின.

சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றியதாக 142, தலைக்கவசம் அணியாததற்காக 1130, இருசக்கர வாகனத்தில் பில்லியனில் இருப்பவர் தலைகவசம் அணியாததற்காக 228, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 758, இரு சக்கர வாகனங்களில் மூவர் பயணித்ததற்காக 34, இதர விதிகளை மீறியதாக 218 வழக்குகள் என 2884 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X