பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் ஆவின் பால் துர்நாற்றம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை ஆவினில் லேப் தரக்கட்டுப்பாடு பராமரிப்பு சுத்தப்படுத்தும் பிரிவுகளில் திறன் வாய்ந்த நிரந்தர ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பு இல்லாததால் துர்நாற்றம் பிரச்னை ஏற்படுகிறது என ஊழியர்கள் குற்றம்சாட்டினர். கொள்முதல் செய்யப்படும் லட்சக்கணக்கான லிட்., பால் தரம், கொழுப்பு சத்து என உரிய சோதனைகளுக்கு பின் ஆவினில் ஏற்கப்படும். தரமில்லாதது திருப்பி

மதுரை : மதுரை ஆவினில் லேப் தரக்கட்டுப்பாடு பராமரிப்பு சுத்தப்படுத்தும் பிரிவுகளில் திறன் வாய்ந்த நிரந்தர ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பு இல்லாததால் துர்நாற்றம் பிரச்னை ஏற்படுகிறது என ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

கொள்முதல் செய்யப்படும் லட்சக்கணக்கான லிட்., பால் தரம், கொழுப்பு சத்து என உரிய சோதனைகளுக்கு பின் ஆவினில் ஏற்கப்படும். தரமில்லாதது திருப்பி அனுப்பப்படும். பின் லேப் பிரிவில் பதப்படுத்தி தரக்கட்டுப்பாடு சோதனைக்கு பின் சைலோக்களில் (பால் கலன்கள்) குறிப்பிட்ட வெப்பநிலையில் நிரப்பப்படும். இங்கும் தரம் சோதித்து பாக்கெட்டுகளில் பால் அடைக்கப்படும். இதன் பின் நடக்கும் பணிகளில் கவனம் செலுத்துவதில்லை.

ஊழியர்கள் கூறியதாவது: லேப் மற்றும் தரக்கட்டுப்பாடு பிரிவுகளில் உரிய தொழில்நுட்ப தெரிந்த ஊழியர்கள் பணியில் இல்லை. 95 சதவீதம் தற்காலிக பணியாளர்களே உள்ளனர். கண்காணிப்பும் இல்லை.கொள்முதல், பராமரிப்பு, தயாரிப்பு, பி.எம்.சி., பொறுப்பாளர் என முக்கிய பதவிகளுக்கு பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவரே கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். அவரால் 5 பிரிவுகளையும் மேற்பார்வையிட முடியவில்லை. பால் பைப்கள், சைலோக்கள் சுத்தம் செய்யப்படுகிறதா என கண்காணிக்க முடிவதில்லை.

தற்போது 'எஸ்:5 சைலோவில்' உள்ள பாலில் தான் துர்நாற்றம் ஏற்பட்டது. அதிலுள்ள 28 ஆயிரம் லிட்., கேள்விக்குறியாகியுள்ளது. பால் பதப்படுத்தும் பகுதிக்குள் கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்ய வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X