பொது செய்தி

இந்தியா

டில்லியில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: சாலைகளில் பரிசோதனை

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: தலைநகரில் கடந்த 15 நாட்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் டில்லி - நொய்டா சாலையில் ரேண்டம் முறையில் சோதனை செய்ய என உத்தரவிட்டுள்ளனர்.நவம்பர் மாதத்தில் மட்டும் டில்லியில் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,200 பேர் இறந்துள்ளனர். இதுவரை 94,000 நோயாளிகள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அக்டோபர் 28 முதல் தலைநகரில் கொரோனா
Covid19, Delhi, Corona Test, கொரோனா, டில்லி

புதுடில்லி: தலைநகரில் கடந்த 15 நாட்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் டில்லி - நொய்டா சாலையில் ரேண்டம் முறையில் சோதனை செய்ய என உத்தரவிட்டுள்ளனர்.

நவம்பர் மாதத்தில் மட்டும் டில்லியில் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,200 பேர் இறந்துள்ளனர். இதுவரை 94,000 நோயாளிகள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அக்டோபர் 28 முதல் தலைநகரில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்தது. அன்றாட பாதிப்பு எண்ணிக்கை நவ., 11 அன்று 8000 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதனால் புது டில்லி - நொய்டா சாலையில் இன்று முதல் ரேண்டம் முறையில் பரிசோதனை செய்யும் முறையை அறிவித்துள்ளனர்.


latest tamil news



டில்லியைச் சேர்ந்த ஏராளமானோர் நொய்டா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு இடையே வேலை செய்கிறார்கள். அங்கு தான் அதிகம் பேர் பயணிக்கின்றனர். இதனால் அச்சாலையில் பரிசோதனை நடத்த உள்ளனர். நொய்டாவிற்கும் டில்லிக்கும் இடையில் மக்கள் பயணிக்க எந்த தடையும் இல்லை. பரவலான பரிசோதனை மூலம் தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்க முடியும் என கருதுகின்றனர். தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயணிகள் மட்டுமே சோதிக்கப்படுவார்கள். எல்லா பயணிகளும் அல்ல. பரிசோதனை குழுக்கள் டில்லி நொய்டா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
18-நவ-202018:29:30 IST Report Abuse
M.COM.N.K.K. மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகம் என்றால் அதை தடுக்க எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லையே.தும்பை விட்டு வால பிடிப்பார்கள் போல் தெரிகிறதே.
Rate this:
Cancel
Madras Madra - Chennai,இந்தியா
18-நவ-202012:24:00 IST Report Abuse
Madras Madra மழை காலம் முடிந்ததும் இங்கும் அது போல் தொ ற்று பரவ வாய்ப்புள்ளது குளிர் காலத்தில் கவனம் மக்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X