உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் அனுமதியில்லாத 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஆர்.டி.ஓ., ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சீமானூத்து, போத்தம்பட்டி, உத்தப்ப நாயக்கனூர், கணவாய்ப்பட்டி, ஆரியபட்டியில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் போர்வெல்களில் தண்ணீர் எடுத்து விற்றன. ஆர்.டி.ஓ., தாசில்தார் விஜயலட்சுமி, துணை தாசில்தார் ராஜன் மற்றும் வருவாய் அலுவலர்கள் மின் இணைப்பு, தண்ணீர் குழாயை துண்டித்து சீல் வைத்தனர். மேலும் அனுமதியின்றி இயங்கும் ஆலைகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE