சென்னை: ஒரே காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து, தமிழகத்தின் பல இடங்களில் பணியாற்றி வரும், 110 எஸ்.ஐ.,க்கள், 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம், வேலுாரில் நடந்தது.
வேலுார் கோட்டையில் இயங்கி வரும், போலீஸ் பயிற்சி பள்ளியில், 1988ம் ஆண்டு பயிற்சி பெற்று, தற்போது, தமிழகம் முழுதும், எஸ்.ஐ.,க்களாக பணியாற்றி வரும், 110 பேர், 32 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது.தென்னங்கன்று நடவுஇதில் பங்கேற்க, வேலுார் கோட்டைக்கு வந்த, 110 பேரும், ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.பின், காவலர் பயிற்சி பள்ளிக்கு சென்றவர்கள், தற்போது பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

சந்திப்பின் நினைவாக, வளாகத்தில் தென்னங்கன்றுகள் நடப்பட்டன. கோட்டையில் உள்ள திப்பு, ஹைதர் மஹால்களை பார்வையிட்டு, தங்கள் அழகிய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர். சிலர், பயிற்சி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, தேசிய கொடி மற்றும் கொடிமரத்தை வணங்கிய சம்பவம், பார்ப்பவர்களை நெகிழ செய்தது.பின், கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில், ஒருங்கிணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 1988ல் பயிற்சி அளித்த, ஓய்வு பெற்ற எஸ்.பி., தட்சிணாமூர்த்தி, கூடுதல் எஸ்.பி., ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
'வாட்ஸ் ஆப்' குழு
விழாவில், உதவி ஆய்வாளர்கள் சுப்ரமணியன், உமாபதி, மனோகரன், சபாபதி ஆகியோர் பேசுகையில், ''காவல் துறையில் பணியில் சேர்ந்து, 32 ஆண்டுகள் முடிந்து விட்டன. ''இங்கு படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, 'வாட்ஸ் ஆப்' குழு ஒன்றை ஆரம்பித்து, தற்போது ஒன்று கூடியுள்ளோம். இனி வருங்காலத்தில், குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளோம்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE