பவானிசாகர்: ஈரோடு மாவட்டம் முழுவதும், பரவலாக மழை பெய்துள்ளதால், பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில், பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர், முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேசயம் கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு, 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி, காளிங்கராயன் பாசனத்துக்கும், நேற்று முன்தினம் மாலை முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
* ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை முதல் விடியவிடிய மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, கொடுமுடியில், 61 மி.மீ., பதிவானது. பிற இடங்களில் மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு, 44, கோபி, 27, தாளவாடி, 6.6, பவானி, 43, பெருந்துறை, 14, சத்தி, பவானிசாகர், தலா, 18, கொடிவேரி, 25, குண்டேரிப்பள்ளம், 40, வரட்டுப்பள்ளம், 32, சென்னிமலை, 15, கவுந்தப்பாடி, 56, மொடக்குறிச்சி, 17, எலந்தகுட்டை மேடு, 27, நம்பியூர், 25, அம்மாபேட்டை, 29 மி.மீ., பதிவானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE