பவானிசாகர்: பவானிசாகர் அணை அருகே, வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, யானை கூட்டத்தில் இருந்து, வெளியேறிய ஒற்றை யானை, நேற்று மாலை. 5:30 மணியளவில், பவானி சாகர் அணை பூங்கா அருகே உள்ள புங்கார் பழத்தோட்ட நுழைவு வாயிலை திறந்து வெளியே வந்தது. பின், ஊருக்குள் புகுந்து சாலையில் நடந்து வந்தது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்து, பூங்கா வளாகத்துக்கு ஓடினர். கிராம மக்கள் அலறியடித்து சிதறி ஓடினர். சிறிது தூரம் சென்ற யானை, அணை முன்புள்ள பவானி ஆற்றில் இறங்கி, அதன் வழியாக விவசாய நிலங்களுக்குள் சென்றது. கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை, நேற்று பட்டப்பகலில் நுழைந்ததால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். யானையை விரட்ட, கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE