சேலம்: மாத உதவித்தொகை புதிய திட்டத்துக்கு, சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள், வரும், 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், 2020 - 21ல், நடுக்கு வாதம் உடையவர், திசு பன்முக கடினமாதல், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, பராமரிப்பு தொகை, மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம், புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அதனால், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகலுடன், மார்பளவு புகைப்படம், வருவாய்த்துறையிடம், இதுவரை உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான தடையில்லா சான்றுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை, நேரில் அணுக வேண்டும். கலெக்டர் அலுவலக அறை எண்: 11ல், இயங்கும், மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், உதவித்தொகை விண்ணப்பத்தை, வரும், 25க்குள் கொடுக்க வேண்டும். தகவலுக்கு, 0427 -2415242 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE