பொது செய்தி

தமிழ்நாடு

மாணவியின் கல்லூரி படிப்புக்கு நிதி உதவி

Added : நவ 18, 2020
Share
Advertisement
சங்ககிரி: சங்ககிரி, தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி கோபால் மகள் காமாட்சி, 19. இவரது தந்தையின், உடல்நலம் மோசமானதால், சிறு வயது முதல், தன் பாட்டி வீட்டில் வளர்ந்து, கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா உறைவிடப் பள்ளியில் படித்தார். தற்போது, சங்ககிரியில் உள்ள தனியார் கல்லூரியில், பி.எஸ்சி., இயற்பியல் மூன்றாமாண்டு படிக்கிறார். கல்லூரி கட்டணம்

சங்ககிரி: சங்ககிரி, தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி கோபால் மகள் காமாட்சி, 19. இவரது தந்தையின், உடல்நலம் மோசமானதால், சிறு வயது முதல், தன் பாட்டி வீட்டில் வளர்ந்து, கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா உறைவிடப் பள்ளியில் படித்தார். தற்போது, சங்ககிரியில் உள்ள தனியார் கல்லூரியில், பி.எஸ்சி., இயற்பியல் மூன்றாமாண்டு படிக்கிறார். கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த அவர், சின்னாக்கவுண்டனூரை சேர்ந்த ஆசிரியர் ராஜேஸ்வரியின் உதவியை நாடினார். அவர் மூலம், தகவல் அறிந்த, தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முருகன், தன்னுடன், சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1996ல் படித்த, முன்னாள் மாணவர்களை அணுகினார். அவர் உள்பட ஏழு பேர் இணைந்து, அந்த மாணவியின் மூன்றாம் ஆண்டு கல்விக்கட்டணம், 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக, நேற்று வழங்கினர். அதை பெற்ற காமாட்சி, பணம் கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X