பொது செய்தி

தமிழ்நாடு

2ம் பருவ நோட்டு புத்தகம் பள்ளிகளுக்கு வினியோகம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
சேலம்: இரண்டாம் பருவ, விலையில்லா நோட்டு புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன. அரசு, அதன் நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதில், எட்டாம் வகுப்பு வரை, மூன்று பருவமாக பிரித்து வழங்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில், இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள், மாணவ,

சேலம்: இரண்டாம் பருவ, விலையில்லா நோட்டு புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன. அரசு, அதன் நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதில், எட்டாம் வகுப்பு வரை, மூன்று பருவமாக பிரித்து வழங்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில், இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள், மாணவ, மாணவியருக்கு வழங்கிய நிலையில், நோட்டு புத்தகங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அங்கிருந்து, வாகனங்கள் மூலம், அந்தந்த பள்ளிகளுக்கு, விலையில்லா நோட்டு புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது. சேலம் கல்வி மாவட்ட, நோட்டு புத்தகங்கள், நேற்று, சி.எஸ்.ஐ., பள்ளியிலிருந்து, வாகனங்களில் ஏற்றி பள்ளிகளுக்கு நேரில் வினியோகிக்கப்பட்டன. இன்றும், வினியோகம் தொடர்கிறது. பாடப்புத்தகத்துடன் வழங்காமல் தாமதப்படுத்தியதால், தற்போது நோட்டு புத்தகங்களை பெற, மீண்டும் ஒருமுறை மாணவ, மாணவியரை, பள்ளிக்கு வரவழைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X