கெங்கவல்லி: மகனால் விரட்டப்பட்ட பெற்றோரை, ஆர்.டி.ஓ., - தாசில்தார் மீட்டனர். கெங்கவல்லி, புனல்வாசலை சேர்ந்தவர் அழகுவேல், 60. இவரது மனைவி முத்துலட்சுமி, 55. இவர்களுக்கு, மகன் முருகவேல், இரு மகள்கள் உள்ளனர். விவசாய நிலத்தை எழுதி வைக்கும்படி, அவரது மகன், பெற்றோரை விரட்டியுள்ளார். இதுகுறித்து, கெங்கவல்லி போலீசார், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் பலனில்லாததால், மூத்த தம்பதியர், வீட்டுக்கு செல்ல முடியாமல், வீரகனூர் சிவன் கோவிலில் தஞ்சமடைந்தனர். கடந்த, 12ல், தம்பதி, தங்களை கருணைக்கொலை செய்ய, முதல்வர், கலெக்டருக்கு மனு அனுப்பினர். இதையடுத்து, ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரை, தாசில்தார் அன்புச்செழியன் ஆகியோர், தம்பதியரை மீட்டு, உணவு வாங்கிக்கொடுத்தனர். பின், அவரது மகனை வரவழைத்து விசாரித்தனர். அப்போது, 'பெற்றோரிடம், இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ள மாட்டேன்' என, மகன் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து, அவரது பெற்றோரும், 'மகன் மீது நடவடிக்கை வேண்டாம்' எனக்கூறியதால், அவரது வீட்டில், தம்பதியரை, வருவாய்த்துறையினர் விட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE