சேலம்: போலீசில், பணியின்போது இறப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு அதிகரித்துள்ளது.
தமிழக போலீசில், 1.20 லட்சம் போலீசார், அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இவர்களில், மன அழுத்தம், உயரதிகாரிகளின் தொந்தரவு, குடும்ப பிரச்னை, உடல்நிலை பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆண்டுக்கு சராசரியாக, 100க்கும் குறைவானவர் இறந்து வந்தனர். கடந்த, 2015க்கு பின், பணியின்போது இறப்போரின் எண்ணிக்கை, 100ஐ தாண்டியது. இதில், தற்கொலை, விபத்துகளால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்தது. நடப்பாண்டு இறப்பு விகிதம், ஆண்டு சராசரியை விட, இரு மடங்கு அதிகரித்தது. கடந்த ஜனவரி முதல், அக்., 3 வரை மட்டும், 238 பேர் இறந்தனர். அக்., 4 முதல், நவ., 15 வரையான, 42 நாளில், 47 பேர் இறந்ததால், நடப்பாண்டில், இறப்பு எண்ணிக்கை, 285 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, வீரமரணம் 2, கொலை 1, தற்கொலை 43, கொரோனா 40, உடல் நலக்குறைவு 90, மாரடைப்பு 46, விபத்து 56, புற்றுநோய் 7 என, நடப்பாண்டு, நவ., 15 வரை, 285 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு, இதே கால கட்டத்தில், 125 பேர் மட்டும் இறந்த நிலையில், நடப்பாண்டு, இறப்பு எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது. போலீசுக்கு வார விடுப்பு கட்டாயப்படுத்துவதோடு, பணி வரன்முறை செய்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, இன்ஸ்பெக்டர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE