சேலம்: புதிதாக, 69 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், ஒரு பெண், எட்டு ஆண்கள் குணம் அடைந்ததால், நேற்று, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுதவிர, சேலத்தில், புதிதாக ஒரேநாளில், 69 பேருக்கு, தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 33 பேர், ஆத்தூர், 3, மேச்சேரி, சங்ககிரி, ஆத்தூர் நகராட்சி, தலா, 2, கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர் நகராட்சி, ஓமலூர், அயோத்தியாப்பட்டணம், தலைவாசல், நரசிங்கபுரம் நகராட்சி, தலா ஒருவர் வீதம், மாவட்டத்தில், 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, கிருஷ்ணகிரி, 6, நாமக்கல், 5, தர்மபுரி, 4, ஈரோடு, 3, கரூர், 2 பேர், என, சேலத்தில் பாதிக்கப்பட்டோர், 69 பேர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE