நங்கவள்ளி: நங்கவள்ளியில், அரசு சார்பில் நாளை நடக்க உள்ள விழாவில், முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். அதில், புது பி.டி.ஓ., அலுவலகம், வனவாசி தொழில்நுட்ப கல்லூரி விடுதி கட்டடம் உள்பட, பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புது பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவி வழங்கவுள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணி நடந்து வருகிறது. பெரியசோரகையில் முதல்வர் பங்கேற்கும் கும்பாபி?ஷக கோவில், வனவாசியில் விழா நடக்க உள்ள இடங்களில், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,பெரியய்யா, நேற்று ஆய்வு செய்தார். சேலம் டி.ஐ.ஜி., பிரதீப்குமார், எஸ்.பி., தீபாகானிகேர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE