பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி பாசன நீர் விவகாரம்: 2 கிராம மக்களிடம் பேச்சு

Added : நவ 18, 2020
Share
Advertisement
ஆத்தூர்: முட்டல் ஏரி தண்ணீரை பாசன வாய்க்காலில் விடுவது தொடர்பாக, இரு கிராம மக்களிடம், ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை நடத்தினார். ஆத்தூர், முட்டல் ஏரியில் இருந்து, கல்லாநத்தம் ஏரிக்கு தண்ணீர் செல்ல, இரு ஆண்டுக்கு முன் புதிதாக வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்க, முட்டல், அம்மம்பாளையம் பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த,

ஆத்தூர்: முட்டல் ஏரி தண்ணீரை பாசன வாய்க்காலில் விடுவது தொடர்பாக, இரு கிராம மக்களிடம், ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை நடத்தினார். ஆத்தூர், முட்டல் ஏரியில் இருந்து, கல்லாநத்தம் ஏரிக்கு தண்ணீர் செல்ல, இரு ஆண்டுக்கு முன் புதிதாக வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்க, முட்டல், அம்மம்பாளையம் பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த, 4ல், வாய்க்காலில் கதவு அமைத்து, பொதுப்பணித்துறையினர் பூட்டு போட்டனர். 13ல், பூட்டு உடைக்கப்பட்டதால், அம்மம்பாளையம் விவசாயிகள், ஆத்தூர் ஊரக போலீசில் புகாரளித்தனர். இதுதொடர்பாக, நேற்று, ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கல்லாநத்தம், அம்மம்பாளையம் பாசன விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆர்.டி.ஓ., துரை தலைமை வகித்து, இரு ஊர்களின் விவசாயிகளிடம், கருத்து கேட்டார். பின், ஆர்.டி.ஓ., கூறுகையில், ''இதுதொடர்பான அறிக்கை கலெக்டருக்கு வழங்கப்படும். ஏரி தண்ணீர் திறந்துவிடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X