சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி விபத்து: கூலித்தொழிலாளி பலி

Added : நவ 18, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சிக்காரிமேடு அருகே, புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில் பீஹார் மாநிலம் தாங்கல் அருகே உள்ள, தட்டோல் கிராமத்தை சேர்ந்த வேணிபிரசாத்சிங், 52; என்பவரும் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 14 கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே உள்ள, ஒரு தாபா ஓட்டல் எதிரில் சாலையை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சிக்காரிமேடு அருகே, புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில் பீஹார் மாநிலம் தாங்கல் அருகே உள்ள, தட்டோல் கிராமத்தை சேர்ந்த வேணிபிரசாத்சிங், 52; என்பவரும் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 14 கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே உள்ள, ஒரு தாபா ஓட்டல் எதிரில் சாலையை கடந்துள்ளார். அப்போது, அவ்வழியே ஸ்பிளெண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் வந்த, சூளகிரி அடுத்த ராமபுரத்தை சேர்ந்த ரங்கசாமி, 54, என்பவர், அவர் மீது மோதியுள்ளார். இதில் இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். அவர்களை அங்கிருந்தோர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வேணிபிரசாத்சிங் நேற்று முன்தினம் இறந்தார். லேசான காயத்துடன் ரங்கசாமி உயிர்தப்பினார். இது குறித்து, குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X