ஓசூர்: ஓசூர் அருகே, திருமணத்துக்கு அரசு பள்ளி மாணவி கடத்தப்பட்ட நிலையில், மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர். ஓசூர் அடுத்த பென்னாமடத்தை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. அருகேயுள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்; கடந்த, 11 காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, தன் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்து பார்த்தார். மகள் இருக்குமிடம் தெரியாததால், ஓசூர், அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். விசாரணையில், ஓசூர் அடுத்த அலசட்டியை சேர்ந்த டிரைவர் முருகேஷ், 23, என்பவர், மாணவியை திருமணம் செய்யும் நோக்கில், தன் நண்பர்களான கர்நாடகாவை சேர்ந்த ராஜேந்திரன், 24, அலசட்டியை சேர்ந்த சிவராஜ், 24, ஆகியோர் உதவியுடன் கடத்திச் சென்றது தெரிந்தது. இதையடுத்து, மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE