பொது செய்தி

தமிழ்நாடு

கிசான் திட்ட முறைகேடு: ரூ.2.64 கோடி மீட்பு

Added : நவ 18, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிசான் திட்டத்தில், பதிவு செய்த தகுதியற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம், பணத்தை மீட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் படி, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள, 8,097 தகுதியற்ற பயனாளிகளில் நேற்று வரை, 7,444 பயனாளிகளிடமிருந்து, 2

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிசான் திட்டத்தில், பதிவு செய்த தகுதியற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம், பணத்தை மீட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் படி, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள, 8,097 தகுதியற்ற பயனாளிகளில் நேற்று வரை, 7,444 பயனாளிகளிடமிருந்து, 2 கோடியே, 64 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 653 பேரிடம், உரிய பணத்தை வசூலித்து, அரசு கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X