கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அரசு மருத்துவமனையில், டாக்டராக பணிபுரிந்து வருபவர் லோகேஷ். 40; இயற்கை ஆர்வலர். இவர், அதிகளவில் மரக்கன்றுகளை வளர்த்து இயற்கை, பறவைகள் மற்றும் மக்களை பாதுகாக்க வேண்டும் எனக்கூறி, அவ்வப்போது பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். அதன்படி நேற்று, வேப்பனஹள்ளி மக்களுக்கு, 3,000 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், வேப்பனஹள்ளி, தி.மு.க., - எம்.எல்.ஏ., முருகன், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, செடிகளை கட்டாயம் நட்டு, பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், தேக்கு, ஜம்பு நாகம், கொய்யா உள்ளிட்ட, 10 வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஒன்றிய குழுத்தலைவர் சரோஜினி பரசுராமன், ஒன்றிய செயலாளர் ரகுநாத் உள்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். இம்மாதத்தில் மேலும், 7,000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்க உள்ளதாக, டாக்டர் லோகேஷ் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE