சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், மகளை மிரட்டி 6 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

Added : நவ 18, 2020
Share
Advertisement
குடியாத்தம்: குடியாத்தம் அருகே, தாய், மகளை மிரட்டி ஆறு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நந்தத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின், 50 வயது மனைவி. இவர்களின், 24 மற்றும் 22 வயது மகள்கள், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வீட்டுக்கு அருகே வசிப்பவர்,

குடியாத்தம்: குடியாத்தம் அருகே, தாய், மகளை மிரட்டி ஆறு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.


வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நந்தத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின், 50 வயது மனைவி. இவர்களின், 24 மற்றும் 22 வயது மகள்கள், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வீட்டுக்கு அருகே வசிப்பவர், யுவராஜ், 50; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். மாஜி ராணுவ வீரரின் மனைவி குளிப்பதை யுவராஜ் தன் மொபைல் போனில், வீடியோ எடுத்துள்ளார். இதை காட்டி, ராணுவ வீரரின் மனைவி, அவரது, 24 வயது மகள்ஆகியோரிடம் காண்பித்து, இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, ஆறு ஆண்டுகளாக அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதையும், மொபைல் போனில் வீடியோவாக எடுத்து, இரண்டாவது மகளிடம் காண்பித்து, அவரையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பிய, இரண்டாவது மகள் இதுகுறித்து தந்தையிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர் மற்றும் குடும்பத்தினர், யுவராஜ் வீட்டுக்கு கடந்த, 10ல் சென்று, தகராறு செய்தபோது, அவர்களை யுவராஜ் கத்தியால் வெட்டியுள்ளார். இது குறித்து புகார் அளித்தும், குடியாத்தம் போலீசார் விசாரணை செய்யாததால், வேலூர் மாவட்ட எஸ்.பி., செல்வகுமாருக்கு கடிதம் எழுதினர். உடனடி நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். குடியாத்தம் போலீசார் யுவராஜை நேற்று கைது செய்தனர். பாலியல் புகார் குறித்து, யுவராஜ் மீது குடியாத்தம் மகளிர் போலீசார், தனியாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X