பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 18, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் தொடரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் பரவலான மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 13 முதல், 16 வரை அணைக்கு வினாடிக்கு, 363 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், மழையால் நேற்று, 402 கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம்

கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் தொடரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் பரவலான மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 13 முதல், 16 வரை அணைக்கு வினாடிக்கு, 363 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், மழையால் நேற்று, 402 கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம் கடந்த எட்டு நாட்களாக, 50 அடியாக உள்ளது. இதனால், அணை பாதுகாப்பு கருதி, வரும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, நிலவரப்படி, அதிகபட்சமாக நெடுங்கல்லில், 22 மி.மீ., மழை பதிவாகியது. இதேபோல் பாரூர், 20.4, போச்சம்பள்ளி, 20, சூளகிரி, 17, பெனுகொண்டாபுரம், 11.4, ஊத்தங்கரை, 11, ஓசூர், 11, ராயக்கோட்டை, 11, கிருஷ்ணகிரி, 10.4, தளி, 10, தேன்கனிக்கோட்டை, 9, அஞ்செட்டி, 7.4 என மொத்தம், 160.6 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X