பொது செய்தி

தமிழ்நாடு

பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.50 ஆக சரிவு

Added : நவ 18, 2020
Share
Advertisement
தலைவாசல்: வரத்து அதிகரிப்பால், பெரிய வெங்காயம் விலை, கிலோ, 50 ரூபாயாக சரிந்தது. சேலம் மாவட்டம், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விளைச்சல் பாதிப்பால், அதன் விலை உயர தொடங்கியது. ஒரு மாதமாக, தினமும், 10 டன் முதல், 12 டன் வரத்து இருந்ததால், ஒரு கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை

தலைவாசல்: வரத்து அதிகரிப்பால், பெரிய வெங்காயம் விலை, கிலோ, 50 ரூபாயாக சரிந்தது. சேலம் மாவட்டம், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விளைச்சல் பாதிப்பால், அதன் விலை உயர தொடங்கியது. ஒரு மாதமாக, தினமும், 10 டன் முதல், 12 டன் வரத்து இருந்ததால், ஒரு கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்றது. நேற்று, தலைவாசல் மார்க்கெட்டுக்கு, வரத்து, 18 டன் முதல் 20 டன் வரை, வெளிமாநில வியாபாரிகள் கொண்டு வந்தனர். இதனால், மொத்த கொள்முதலில் ஒரு கிலோ பெரிய வெங்காயம், 50 ரூபாய்க்கு விற்பனையானது. விலை குறைந்ததால், உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X