பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்களில் கூட்டம் குறைவால் 'மெமோ': டிரைவர், கண்டக்டர்கள் புலம்பல்

Added : நவ 18, 2020
Share
Advertisement
சேலம்: போக்குவரத்துக்கழக பஸ்களில் கூட்டம் குறைவால் கண்டக்டர்கள், டீசல் சிக்கனத்துக்கு டிரைவர்கள் என, 15 நாளில், 200க்கும் மேற்பட்டோருக்கு, அதிகாரிகள், 'மெமோ' கொடுத்துள்ளனர்.தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கால், பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு, நகரவாசிகள் மட்டுமின்றி, கிராமத்தினரும், இருசக்கர வாகனங்களை பயன்படுத்த தொடங்கினர். கடந்த செப்., 1 முதல், பஸ்கள் இயங்க

சேலம்: போக்குவரத்துக்கழக பஸ்களில் கூட்டம் குறைவால் கண்டக்டர்கள், டீசல் சிக்கனத்துக்கு டிரைவர்கள் என, 15 நாளில், 200க்கும் மேற்பட்டோருக்கு, அதிகாரிகள், 'மெமோ' கொடுத்துள்ளனர்.


தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கால், பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு, நகரவாசிகள் மட்டுமின்றி, கிராமத்தினரும், இருசக்கர வாகனங்களை பயன்படுத்த தொடங்கினர். கடந்த செப்., 1 முதல், பஸ்கள் இயங்க தொடங்கியும், எதிர்பார்த்த அளவு பயணியர் வருகை இல்லை. கடந்த ஜனவரியில், தினமும், அரசு பஸ்களில், 1.80 லட்சம் பேர் பயணித்த நிலையில், தற்போது, 1.30 லட்சம் பேர் மட்டும் பயணிப்பது, போக்குவரத்துக்கழக டிக்கெட் விற்பனை மூலம் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அதிகரித்ததால், பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை சரிந்தது. இதை கருத்தில் கொள்ளாமல், அதிகாரிகள், குறைந்த பயணியருடன் இயக்கப்படும் பஸ் கண்டக்டருக்கு, 'மெமோ' கொடுக்கின்றனர்.

மன உளைச்சல்: ஜனவரி வரை, ஒரு லிட்டர் டீசலுக்கு, 5.50 கி.மீ., இயக்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது, 5.80 கி.மீ., முதல், 6 கி.மீ., இயக்க வேண்டும். அதற்கு குறைவாக இயக்கும் டிரைவருக்கு, 'மெமோ' கொடுக்கப்படுகிறது. அதன்படி, சேலம் கோட்டத்தில், 10 நாளில், 15 பேர், தமிழகத்தின் பிற கோட்டங்களில், 15 நாளில், 200 பேருக்கு விளக்கம் கேட்டு, அதிகாரிகள், 'மெமோ' கொடுத்துள்ளனர். இதனால், டிரைவர், கண்டக்டர்கள், மன உளைச்சலுக்கு ஆளாவதாக புலம்புகின்றனர்.

வருவாய்த்துறையினர் அபராதம்: இதுகுறித்து, போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: கொரோனா காலத்தில், பஸ்களை இயக்குவது குறித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறையில், 60 சதவீத இருக்கைக்கு மட்டும், பயணியரை ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, 100 சதவீத இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டபோதும், அதையும் தாண்டி பயணியரை ஏற்றவில்லை என, டிரைவர், கண்டக்டர்களுக்கு, அதிகாரிகள், 'மெமோ' கொடுக்கின்றனர். பயணியரை ஏற்றினால், வருவாய்த்துறையினர் ஆய்வு பெயரில் அபராதம் விதிக்கின்றனர். இதனால், டிரைவர், கண்டக்டர், பெரும் அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X