சென்னை: மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர் உள் ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று (நவ.,18) துவங்கியது.
தமிழக அரசு ஒதுக்கீட்டில், 4,179 எம்.பி.பி.எஸ்., மற்றும், 1,230 பல் மருத்துவ படிப்பான, பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 953 எம்.பி.பி.எஸ்., மற்றும் 695 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, இன்று (நவ.,18) முதல், சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கியது. தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு கவுன்சிலிங், இன்று துவங்கி, 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில், 405 இடங்களுக்கு விண்ணப்பித்த, 951 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுசெய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை பிற்பகலில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
மருத்துவ கவுன்சிலிங்கை துவக்கி வைத்த பின்னர் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், எந்தவித முறைகேடும் நடக்கக்கூடாது என்பதற்காக தான், நேரடியாக கவுன்சிலிங் நடக்கிறது. ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை முதல்வர் நனவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE