சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற
kushboo, accident, குஷ்பு, சாலைவிபத்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.

பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.


latest tamil news



விபத்து தொடர்பாக குஷ்பு கூறுகையில், வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது விபத்து ஏற்பட்டது. கடவுள் அருளால் உயிர்தப்பினேன். இவ்வாறு அவர் கூறினார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan Babu - madurai,இந்தியா
19-நவ-202013:24:38 IST Report Abuse
Saravanan Babu குஷ்பூ உடைய இயற் பெயர் நக்கத் கான் - இவங்க எதுக்கு வேல் யாத்திரை போறாங்க?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21-நவ-202009:37:18 IST Report Abuse
 Muruga Velஉடைய ... என்ன தமிழ் ...அன்பே கடவுள் என்றால் வேல் எதற்கு வேர்க்கடலை தோண்டவா .....
Rate this:
Cancel
samkey - tanjore,இந்தியா
19-நவ-202009:34:22 IST Report Abuse
samkey இந்த விபத்து குசுப்புவின் கார் அவசரப்பட்டு முந்த முற்பட்டதால் ஏற்பட்டது என்றே தோன்றுகிறது. கனரக வாகனங்களை முந்தும்போது மிக எச்சரிக்கை தேவை.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
18-நவ-202021:21:16 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் விபத்துக்குள்ளான குஷ்பூவின் காரை பார்க்கும்போது காரின் வலது பக்கத்தில் பின்பக்க கதவு மட்டுமே சேதமடைந்துள்ளது. இப்படிப்பட்ட சேதம் முன்னால் செல்லும் வாகனத்தை முந்த முயலும்போது, தான் முந்த முயலும் வாகனத்தின் வேகத்தை சரியாக கணிக்காமல் முந்தும் வாகனத்தின் ஓட்டுநர் செய்யும் தவறால்தான் ஏற்படும். இந்த விபத்துக்கு குஷ்பூவின் கார் ஓட்டுனர்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். அவர் மீது ஏதும் நடவடிக்கை எடுக்காமல், லாரி ஓட்டுனரை கைது செய்திருப்பது தவறான செயல்.அதைவிட இதை சதிச்செயல் என்று குஷ்பூ கூறுவது சரியான காமெடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X