கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது: யுஜிசி திட்டவட்டம்

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கொரோனோ பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி
ChennaiHC, UGC, ArrearExam, சென்னை, உயர்நீதிமன்றம், அரியர், தேர்ச்சி, வழக்கு, தேர்வு, யுஜிசி

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரோனோ பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது. யுஜிசி தரப்பில், 'இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். அரியர் தேர்வுகளை ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை' எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவ.,20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil news


இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வழக்கறிஞர் ராம்குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளதாகவும், தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (நவ.,18) நடைபெற்றது. அதில், 'கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது. அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்த வேண்டும்,' என யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்தது.

பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'இந்த வழக்கு, அரியர் மாணவர்களை தேர்ச்சியடைய செய்ததை எதிர்த்த வழக்குடன் சேர்த்து நவ.,20ல் விசாரிக்கப்படும். வழக்கு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் விடுக்கிறது,' என தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-நவ-202006:28:10 IST Report Abuse
D.Ambujavalli டாஸ்மாக்கில் மூன்று மாதமாக வரும் கூட்டம், கோடிகளில் சம்பாதித்துக் கொடுப்பதால் அது மிக முக்கியம் என்று திறக்கப்பட்டது பசங்கள் படிப்பு விஷயத்தில்தான் கொரானாவை வைத்து வோட்டு வாரி விடலாம் என்று நினைத்தார் என்றாவது தேர்வு எழுதி ஆக வேண்டும் என்று தயார் செய்து கொண்டிருந்தவர்களையும் சோம்பேறிகளாக்கி டிகிரி கையில் வாங்கிவிட்ட மாயையை ஏற்படுத்தி , இப்போது நீதிமன்றம், மாணவர்கள், எல்லா பக்கமும் குட்டு, இடி, பதவி இருந்தால் முன் பின் யோசனை இல்லாமல் அறிவித்து காட்டிய கெத்துக்கு நெத்தியடி
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
18-நவ-202021:42:24 IST Report Abuse
madhavan rajan கரோனா வந்தால் பரீட்சைக்கு போகமுடியாது ஆனால் டாஸ்மாக்குப் போக முடியும். இது எப்படி இருக்கு?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
18-நவ-202020:21:48 IST Report Abuse
vbs manian கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகள் எல்லோருக்கும் பள்ளிக்கு போகாமலே பதினைந்து வயது முடிந்தவுடன் ஆல் பாஸ் சான்றிதழ் வழங்கப்படும் என்று சொல்லவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X