பொது செய்தி

தமிழ்நாடு

நலவாரியங்களில் உறுப்பினராக சேர்க்கை: இணையத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு

Added : நவ 18, 2020
Share
Advertisement
நாமக்கல்: 'நலவாரியங்களில் உறுப்பினராக சேர, இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்' என, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, கல்வி, மகப்பேறு திருமணம், விபத்து, இயற்கை மரணம்,

நாமக்கல்: 'நலவாரியங்களில் உறுப்பினராக சேர, இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்' என, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, கல்வி, மகப்பேறு திருமணம், விபத்து, இயற்கை மரணம், ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நலவாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கு உரிய பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனு உதவித்தொகை போன்ற பணிகள், https://labour.tn.gov.in என்ற இணைதளத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், 18 முதல், 59 வயது வரை உள்ளவர்கள், கல் உடைப்போர், கட்டட தொழிலாளி, பெயின்டர் போன்ற, 53 வகையான கட்டுமான தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். பஸ், லாரி, ஆட்டோ (டிரைவர்) போன்ற தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள், விசைத்தறி, கைத்தறி, தையல், வீட்டுப்பணி உள்பட, 53 வகையான தொழில்களில் ஈடுபடும் உடல் உழைப்பு தொழிலாளர்கள், நல வாரியங்களில் கட்டாயம் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும். வயது சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதி சான்று, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு, 30 நாட்களுக்குள், நலவாரிய பதிவு எண் விபரம், அவர்களது மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்படும். அவற்றை பயன்படுத்தி, தங்களது நலவாரிய அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X