நாமக்கல்: 'நெல் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், புயல், வெள்ளம், வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதல், ஆகிய இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்து கொள்ள, டிச., 15க்குள், பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்' என, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், நெல் சம்பா பயிர் மற்றும் வெங்காயம் பயிர் காப்பீடு செய்ய, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நெல் சம்பா, 21 பிர்காக்களிலும், வெங்காயம், நான்கு பிர்காக்களிலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. கடன் பெறும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட வங்கிகளில், தங்களின் சுய விருப்பத்தின் பேரில் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில், நெல் சம்பா பயிருக்கு, டிச., 15 வரையும், வெங்காயம் பயிருக்கு, வரும், 30 வரையும் காப்பீடு செய்து கொள்ளலாம். ஏக்கருக்கு, நெல் சம்பா பயிருக்கு, 494.25 ரூபாய் பிரிமியம்; வெங்காயத்துக்கு, 1805.58 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்யும் முன், முன்மொழிவு விண்ணப்பத்துடன், வி.ஏ.ஓ.,வின் அடங்கல், விதைப்பு சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து கட்டணத்தை செலுத்த வேண்டும். விபரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE