பொது செய்தி

தமிழ்நாடு

3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆராய்ச்சி நிலையம் தகவல்

Added : நவ 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல், மூன்று நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.அறிக்கை விபரம்: அடுத்த, மூன்று நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று, 20 மி.மீ., நாளை மற்றும் நாளை மறுநாள் தலா, 10 மி.மீ., மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு, ஆறு கி.மீ.,வேகத்தில்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல், மூன்று நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.


அறிக்கை விபரம்: அடுத்த, மூன்று நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று, 20 மி.மீ., நாளை மற்றும் நாளை மறுநாள் தலா, 10 மி.மீ., மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு, ஆறு கி.மீ.,வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சம், 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சம், 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம், 95 - 60 சதவீதமாக இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்த வரை, அடுத்த, மூன்று நாட்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடி தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க, மழை வரும் நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது. மேலும், முள்கம்பி வேலி அல்லது மரங்களின் அருகில் கட்டுவதை தவிர்க்க வேண்டும். நைட்ரேட் அதிகம் உள்ள தீவன பயிர்களை கால்நடைகள் உண்ணும்போது, நைட்ரேட் நச்சு ஏற்படுகிறது. எனவே, சாக்கடை கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கொண்டு தீவன பயிர்கள் உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும். கறவை மாடுகளுக்கு தேவையான அளவு கலப்பு தீவனம் அல்லது தானியங்கள், தாது உப்பு கலவை கொடுப்பதால் ஒரளவுக்கு நைட்ரேட் நச்சு தாக்கத்தை குறைக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-நவ-202020:20:21 IST Report Abuse
rajan சென்னையில் இனி மழை வராது. இரண்டு நாட்கள் மழைக்கு வழக்கம்போல் டிவிகாரர்களின் ஒப்பாரி. காட்டாங்கொளத்தூரில் இருநூறு வீடுகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். அதற்கு பட்டா போட்டு மக்களை ஏமாற்றி சம்பாதித்து கொள்ளை அடித்து விட்டனர் பல வருடங்களுக்கு முன்பு. நீர்நிலைகளில் வீடுகள் கட்டினால் தண்ணீர் எப்படி போகும். அங்கே பட்டா போட்டு நிலத்தை விற்று சம்பாதித்தவர்கள் அப்போதைய ஆட்சியாளர். அரசு அதிகாரிகளும் அதற்கு உடந்தை. இப்போது அவர்களுடைய தொலைக்காட்சியே ஒப்பாரி வைக்கிறது தண்ணீர் தேங்கி உள்ளது, மக்கள் பரிதவிக்கிறார்கள் என்றெல்லாம் பரிதாப புராணம் வசிக்கிறார்கள். வயல்வெளியிலும் ஏரிகளிலும் மழை பெய்தால் தண்ணீர் எப்படி வெளியேறும்? நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள எல்லா வீடுகளையும் இடித்துவிட்டு அவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் அரசாங்கம் கட்டித்தர வேண்டும். நீர்நிலைகளில் பட்டா போட்டு விற்பனை செய்து அனுமதி கொடுத்த அரசு அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். மழை பெய்கிறது மழை பெய்கிறது தண்ணீர் வெளியேறவில்லை என்று ஒவ்வொரு முறையும் டிவிகாரர்களின் ஒப்பாரி தாங்க முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X