பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.406 கோடியில் புகளூர் கதவணை பணி: அமித்ஷா தொடங்கி வைப்பாரா?

Added : நவ 18, 2020
Share
Advertisement
கரூர்: இறுதி கட்ட டெண்டர் பணிகள் முடியாத நிலையில், வரும், 21ல், 406.5 கோடி ரூபாய் மதிப்பில், புகளூர் கதவணை திட்டப் பணிகளை, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பதற்கு வாய்ப்பு குறைவு' என, அதிகாரிகள் கூறுகின்றனர். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களின், நீண்ட நாள் கோரிக்கையான புஞ்சை புகளூர் பகுதி காவிரியாற்றின் குறுக்கே, கதவணை கட்டப்படும் என, சட்டசபையில் முதல்வர் பழனிசாமி

கரூர்: இறுதி கட்ட டெண்டர் பணிகள் முடியாத நிலையில், வரும், 21ல், 406.5 கோடி ரூபாய் மதிப்பில், புகளூர் கதவணை திட்டப் பணிகளை, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பதற்கு வாய்ப்பு குறைவு' என, அதிகாரிகள் கூறுகின்றனர். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களின், நீண்ட நாள் கோரிக்கையான புஞ்சை புகளூர் பகுதி காவிரியாற்றின் குறுக்கே, கதவணை கட்டப்படும் என, சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தற்போது, டெண்டருக்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. வரும், 21ல் சென்னைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும்போது, கதவணை திட்டப் பணியை தொடங்கி வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இது குறித்து, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறியதாவது: நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ், 406.5 கோடி ரூபாய் செலவில், கதவணை கட்டப்பட உள்ளது. 1,056 மீட்டர் நீளம் கொண்ட கதவணையில், 72 தூண்கள், 73 தணிப்பு படுகை அமைக்கப்படும். மேலும், ஒரு வழி பாலம் கட்டப்படும். இங்கு, 56 நீர் போக்கி ஷட்டர், 17 மண் போக்கி ஷட்டர் என, 73 ஷட்டர்கள் ஏற்படுத்தப்படும். கதவணையில், 0.8 டி.எம்.சி., தண்ணீர் சேமித்து வைக்க முடியும். 4,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த பணிகளை, சென்னையில் இருந்து காணொலி காட்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார் என்று தகவல் வெளியானது. இதையடுத்து, கதவணை கட்டப்படும் காவிரி ஆற்று பகுதியை, கரூர் கலெக்டர் மலர்விழி இன்று (நேற்று) ஆய்வு நடத்தினார். வரும், 26ல்தான் டெண்டர் பணிகள் முடிவடையும் நிலை உள்ளது. அதன்பின்னரே, கட்டுமான பணிகளுக்கு தொடக்க விழா நடத்த முடியும். எனவே வரும், 21ல் கதவணை கட்டுமானத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை மட்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X