கரூர்: கரூரில், நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. குமரி கடல் பகுதியில் எழுந்த, மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக, கரூர் மாவட்டத்தில் கடந்த, சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம், 3:00 மணிக்கு கரூர் டவுன், வேலாயுதம்பாளையம், மண்மங்கலம், மாயனூர், புலியூர், வெள்ளியணை, ஈசநத்தம், வாங்கல், க.பரமத்தி, திருமாநிலையூர், சுக்காலியூர், திருகாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல், இடி மற்றும் பலத்த காற்றுடன், 15 நிமிடம் மழை பெய்தது. இதனால், வாங்கல் சாலை, ஜவஹர் பஜார், கோவை சாலைகளில், தண்ணீர் ஓடியது. தான்தோன்றிமலையில், வ.உ.சி., தெரு, சவுரி முடித்தெரு, வடக்கு தெருக்களில், ஒரு சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்தது. இதனால், அந்த பகுதிகளில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE