பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலை கேட்டு பணியாளர்கள் போராட்டம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, பொருந்தலூர் பஞ்சாயத்தில், 100 நாள் திட்டப் பணிகளில், 300க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில், தெலுங்கபட்டி காலனி தெரு, பூசாரிவீடுகள் தெரு, தெலுங்கபட்டி காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், 100 நாள் திட்ட பணிகளான மண்வரப்பு அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல், உறிஞ்சு குழி அமைத்தல், மரக்கன்று நட்டு பராமரித்தல் உள்பட, பல்வேறு

குளித்தலை: குளித்தலை அடுத்த, பொருந்தலூர் பஞ்சாயத்தில், 100 நாள் திட்டப் பணிகளில், 300க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில், தெலுங்கபட்டி காலனி தெரு, பூசாரிவீடுகள் தெரு, தெலுங்கபட்டி காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், 100 நாள் திட்ட பணிகளான மண்வரப்பு அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல், உறிஞ்சு குழி அமைத்தல், மரக்கன்று நட்டு பராமரித்தல் உள்பட, பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு கடந்த ஒரு மாதமாக, 100 நாள் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கவில்லை. 100 நாள் திட்டத்தில், தொடர்ந்து வேலை தரவேண்டும் என்று வலியுறுத்தி, யூனியன் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், பிரபாகரன் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தி, '100 நாள் திட்டப்பணிகள் குறித்து, ஒப்புதல் அளித்தவுடன், இரண்டு நாட்களில் பணிகள் தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். இதையடுத்து, பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X