அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி புறநகர் பகுதியில், சேவல் சண்டை நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அரவக்குறிச்சி, ஜீவாநகர் மேற்கு பகுதியில், சிறப்பு நிலை பேரூராட்சி குப்பை சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு அனுமதியின்றி. சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரவக்குறிச்சி போலீசார் அங்கு சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி, 49, ரமேஷ், 26, பிரவின்குமார், 22, உள்ளிட்ட மூன்று பேர் சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்த இரண்டு சேவல்களையும் பறிமுதல் செய்ததுடன், மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE