கரூர்: கரூரில், பஸ் பாடி நிறுவன தொழிலாளியிடம், கத்தியை காட்டி பணம் பறித்த, மூன்று பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ், 24; பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம், மக்கள் பாதை டாஸ்மாக் மதுபான கடை, பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 28; சின்ன ஆண்டாங்கோவில் தமிழழகன், 26; நெரூர் முருகானந்தம், 26; ஆகியோர், சதீஷிடம் கத்தியை காட்டி, 500 ரூபாயை பறித்துள்ளனர். இதுகுறித்து, சதீஷ் போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE