ஆற்றுப்பாலத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி தாமதத்தால் விபத்து அபாயம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில், தடுப்புச்சுவர் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், பாலத்தில் மீண்டும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சுக்காலியூரில், அமராவதி ஆற்றின் குறுக்கே, இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் வழியாக, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கேரளா மாநிலத்துக்கு, 24 மணி நேரமும்

கரூர்: கரூர் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில், தடுப்புச்சுவர் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், பாலத்தில் மீண்டும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.


கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சுக்காலியூரில், அமராவதி ஆற்றின் குறுக்கே, இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் வழியாக, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கேரளா மாநிலத்துக்கு, 24 மணி நேரமும் வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், கடந்த மாதம், 11ல் தென்காசியில் இருந்து, சேலத்துக்கு மரக்கட்டைகளை ஏற்றி சென்ற லாரி, அமராவதி ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர்களை, உடைத்து ஆற்றில் கவிழ்ந்தது. அதில், லாரி டிரைவரும், உதவியாளரும் காயத்துடன் உயிர் தப்பினர். அப்போது, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தடுப்புச்சுவர் உடைந்த இடத்தில், பிளாஸ்டிக் டேப்புகளை கட்டினர். சில நாட்களுக்கு பிறகு, தடுப்புச்சுவர் கட்டும் பணி துவங்கியது. ஆனால், பணிகளை விரைவாக முடிக்காமல், இரும்பு டின்களை வைத்துள்ளனர். இதனால், மீண்டும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பாலம் கட்டும் பணியை விரைவாக முடிக்க, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X