கரூர்: நகருக்குள் வரும் கனரக வாகனங்களால், அரவக்குறிச்சியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரவக்குறிச்சி பகுதிக்கு, தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில், சரக்கு லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் செல்பவர்களை பற்றி, கவலைப்படாமல் மணல் லாரிகள், மின்னல் வேகத்தில் செல்வதால், விபத்து ஏற்படுகிறது. டிரைவர்கள் உரிய ஆவணம் இல்லாமலும், குடிபோதையிலும் லாரிகளை ஓட்டி செல்கின்றனர். விபத்து ஏற்படும் போது, மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தால் கூட, அவர்கள் மீது தப்பிக்கும் வகையில் வழக்குபதிவு செய்கின்றனர். 'புறவழிச்சாலை இருக்கும் போது, சரக்கு வாகனங்களை அரவக்குறிச்சிக்குள் வந்து செல்ல தடைவிதிக்க வேண்டும்,' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE