சென்னை: தான் முதல்வராக பொறுப்பேற்ற பின் 1,990 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று (நவ.,18) முதல், சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில், 405 இடங்களுக்கு விண்ணப்பித்த, 951 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் முதல் 18 மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

அந்த விழாவில் பழனிசாமி பேசியதாவது: இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள்; அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நன்னாள். அரசுப் பள்ளியில் படித்துவரும் மாணவர்களுக்கு மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம். பல தடைகளைத் தாண்டி இந்த சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளது. நான் முதல்வராக பொறுப்பேற்றப்பின் தமிழகத்தில் 1,990 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE