சீனாவின் கொரோனா தடுப்பூசியும் பாதுகாப்பானது - ஆய்விதழ் தகவல்

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
பீஜிங்: சீனாவின் சினோவேக் பையோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 18 முதல் 59 வயதுடைய நபர்களிடையே வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுவதாக லான்செட் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் உண்டாகி ஒர் ஆண்டு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அவ்வைரஸின் பாதிப்பு நவீன உலகம் சந்தித்திராத வகையில் அமைந்துள்ளது. இதற்கு எதிரான தடுப்பூசியை அடுத்த ஆண்டு
கொரோனா, தடுப்பூசி, சீனா,

பீஜிங்: சீனாவின் சினோவேக் பையோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 18 முதல் 59 வயதுடைய நபர்களிடையே வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுவதாக லான்செட் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் உண்டாகி ஒர் ஆண்டு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அவ்வைரஸின் பாதிப்பு நவீன உலகம் சந்தித்திராத வகையில் அமைந்துள்ளது. இதற்கு எதிரான தடுப்பூசியை அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் கொண்டு வர பல்வேறு மருந்து நிறுவனங்களும் மும்முரம் காட்டி வருகின்றன. பைசர், ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனகா உள்ளிட்ட தடுப்பூசிகளின் பரிசோதனைகள் 90% மேல் வெற்றிக்கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சீன மருந்து நிறுவனமான சினோவேக் பையோடெக் தயாரித்துள்ள கொரோனாவேக் தடுப்பூசியும் பாதுகாப்பானதாக இருப்பதாக லான்செட் மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 16 முதல் மே 5 வரை சீனாவில் 700-க்கும் மேற்பட்டோரிடம் இம்மருந்து பரிசோதிக்கப்பட்டது. சோதனை செய்யப்பட்ட அனைத்து அளவுகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது. பொதுவான பக்க விளைவாக ஊசி போடும் இடத்தில் சில மணி நேரம் வலி நீடிக்கிறது. 14 நாட்கள் இடைவெளியில் 2 தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர் வலுவான நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகிறது. மிகக் குறைந்த அளவான 3 மைக்ரோ கிராம் தடுப்பூசி செலுத்திய போதும் எதிர்ப்பாற்றல் தூண்டப்படுகிறது. தடுப்பூசியை காட்டிலும் கொரோனாவால் பாதித்து மீண்டவர்கள் உடலில் அதிக அளவில் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-நவ-202008:54:54 IST Report Abuse
Lion Drsekar குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது முன்னோர் வாக்கு, வந்தே மாதரம்
Rate this:
Cancel
aanthai - Toronto,கனடா
19-நவ-202005:04:20 IST Report Abuse
aanthai சீனாவின் கொரோனவும் பாதுகாப்பானதுதான் . சீனாக்காரன் பணம் சம்பாதிக்க . மற்ற உலகநாடுகளை சாவடிக்கிறான் .
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
19-நவ-202004:55:28 IST Report Abuse
Allah Daniel முதல்வன் படத்தில் ரகுவரன் சொல்லுவது போல- இவனே கொரோனாவை உற்பத்தி செய்வானாம்...அப்புறம் அதே கொரோனவை அழிக்க, இவனே மருந்தும் செய்யவானாம்...போவியா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X