அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நாங்கள் ஏமாந்த சோனகிரிகள் அல்ல'

Updated : நவ 20, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (75)
Share
Advertisement
சென்னை : ''தன்மானமும், இனமானமும் இழந்து வேடிக்கை பார்க்க, நாங்கள் ஏமாந்த சோனகிரிகள் அல்ல,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.தர்மபுரி மாவட்ட தி.மு.க., சார்பில், 'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில், தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது:மக்களை பற்றி உண்மையான அக்கறை இருந்தால், யாரும் எதைப்
  'நாங்கள் ஏமாந்த சோனகிரிகள் அல்ல'

சென்னை : ''தன்மானமும், இனமானமும் இழந்து வேடிக்கை பார்க்க, நாங்கள் ஏமாந்த சோனகிரிகள் அல்ல,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
தர்மபுரி மாவட்ட தி.மு.க., சார்பில், 'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில், தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது:மக்களை பற்றி உண்மையான அக்கறை இருந்தால், யாரும் எதைப் பற்றியும் பேசலாம். அப்படித் தான் விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருப்பதால், விவசாயிகள் நலன் காக்க நான் பேசுகிறேன்.தமிழக மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு சிறு சேதாரம் ஏற்பட்டாலும், அதை இந்த ஸ்டாலின் தட்டிக் கேட்பான்.
விவசாயம் பற்றி நான் பேசக்கூடாது என்று சொல்ல முதல்வர் இ.பி.எஸ்., யார்; அவர் என்ன சர்வாதிகாரியா; இந்த நாட்டில் வாய்ப்பூட்டுச் சட்டம் அமலில் இருக்கிறதா?மத்திய அரசுக்கு அடிபணிந்து, கைக்கட்டி, வாய்பொத்தி முதல்வர் இ.பி.எஸ்., இருப்பார் என்றால், தி.மு.க., வேடிக்கை பார்க்காது.விவசாயிகள், சிறுபான்மையினர்களை அடகு வைப்பீர்கள். தமிழையும், தமிழகத்தையும் அடமானம் வைப்பீர்கள்.

தன்மானமும், இனமானமும் இழந்து, இந்த அடமான காட்சிகளை வேடிக்கை பார்க்க, நாங்கள் ஏமாந்த சோனகிரிகள் அல்ல. ஒரு கையால் எதிரிகளின் பகை முடிப்போம்; மறுகையால், தமிழினத்துக்கு வாழ்வளிப்போம்; வெற்றி பெறுவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
20-நவ-202010:55:49 IST Report Abuse
Matt P . ஒரு கையால் எதிரிகளின் பகை முடிப்போம்...ஒரு கையாலே அடித்து வீழ்த்தி விடுவோம்ங்கிறாரு ..தலைவரு.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
20-நவ-202010:53:19 IST Report Abuse
Matt P மானம் இல்லாதவன் தன மானம் இன மானம் அவமானம் வெகுமானம் என்று வானத்தை paatthu மானம் மானம் என்று வானத்தைபார்த்து பேசி கொண்டிருப்பான். மஆனம் உள்ளவன் நிறைகுடமாக அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுத்து வூர் மெச்சும்படியாக நடந்து கொள்வான். உங்க தன மானத்தை தான் சர்க்காரியா கமிஷனில், 3ஜியில் பாதாச்சே சுயமரியாதை சாதிகபாட்ச தாக்கி ரமேஷ் என்று எத்தனை உயிர்களை காவு கொண்டுவிட்டது.
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
19-நவ-202022:47:16 IST Report Abuse
தத்வமசி நீங்களும் உங்கள் குடும்பமும் பலே பக்கிரிகள் என்று ஊருக்கே தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X