பொது செய்தி

இந்தியா

லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளது

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை : 'லஷ்மி விலாஸ் வங்கியில், வாடிக்கையாளர்கள், 'டிபாசிட்' செய்த பணம் பாதுகாப்பாக உள்ளது; அஞ்ச வேண்டாம்' என, ரிசர்வ் வங்கி நியமித்த, புதிய நிர்வாகி தெரிவித்துள்ளார். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், லஷ்மி விலாஸ் வங்கி, கடந்த சில ஆண்டுகளாக, மூலதன தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, நேற்று முன்தினம் திடீரென, லஷ்மி விலாஸ்
 லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளது: ரிசர்வ் வங்கி

மும்பை : 'லஷ்மி விலாஸ் வங்கியில், வாடிக்கையாளர்கள், 'டிபாசிட்' செய்த பணம் பாதுகாப்பாக உள்ளது; அஞ்ச வேண்டாம்' என, ரிசர்வ் வங்கி நியமித்த, புதிய நிர்வாகி தெரிவித்துள்ளார்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், லஷ்மி விலாஸ் வங்கி, கடந்த சில ஆண்டுகளாக, மூலதன தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, நேற்று முன்தினம் திடீரென, லஷ்மி விலாஸ் வங்கியின் பல்வேறு நிதிச் சேவைகளுக்கு கட்டுப்பாடு விதித்தது.


latest tamil news


அத்துடன், வாடிக்கையாளர்கள், வங்கியில் 'டிபாசிட்' செய்துள்ள பணத்தில், 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுப்பதற்கு வரம்பு நிர்ணயித்தது.இந்த கட்டுப்பாடு, வரும், டிச., 16 வரை அமலில் இருக்கும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து, கனரா வங்கியின் முன்னாள் செயல்சாரா தலைவர், டி.என்.மனோகரன், லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர், பேசியதாவது:லஷ்மி விலாஸ் வங்கி, சிங்கப்பூரை தலைமையிட மாக கொண்டு செயல்படும், டி.பி.எஸ்., வங்கியுடன், டிச.,16க்குள் இணைக்கப் படும். அதனால், லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள், டிபாசிட் பற்றி கவலைப்பட வேண்டாம். வங்கியிடம், 20 ஆயிரம் கோடி ரூபாய் டிபாசிட் உள்ளது. 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

அதனால், வங்கியின் நிதிநிலை குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களின் டிபாசிட் பத்திரமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். டி.பி.எஸ்., உடன் லஷ்மி விலாஸ் வங்கியை இணைப்பதற்கான, வரைவுஅறிக்கையை, வரும், 20ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
19-நவ-202011:49:44 IST Report Abuse
krish சட்டியில் இருக்கு, ஆனால் ஆப்பையில் வராது. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாது .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-நவ-202008:52:45 IST Report Abuse
Lion Drsekar எதுவுமே மக்களுக்கு நேரடியாக யாரும் தெரிவிப்பதே இல்லை, ஒன்று மக்களின் பிரநிதிகள் அல்லது முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் டிவ்ட்டார் அல்லது வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும்போது பேசுவதுதான் செய்தியாக வருகிறது, காரணம் இன்று இந்த ஒரு செய்தியால் வாட்ஸப்பில் வரும் செய்தி, இனி பொது மக்கள் போட்டிருக்கும் நிரந்திர வாய்ப்பு நிதியை அரசாங்கம் அவர்களாகவே எடுத்துக்கொண்டு காலாவதியாகும் மீண்டும் அவரவர்களின் கணக்கில் சேர்ப்பார்கள் என்றும், ஒரு சில செய்தி பங்க்கில் போட்ட பணத்துக்கு அவர்கள் ஏதோ ஒரு கணக்கு போட்டு நிர்ணயம் செய்து இதனை சதவீதம் தான் உங்களுக்கு என்று கூறப்போகிறார்கள் என்று வந்த வண்ணம் இருப்பதால் இன்று பலர் பங்க்கில் இருந்து பணத்தை எடுத்து வீட்டில் வைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டனர், இந்த செயல்பாடு பெரிய , மற்றும் படித்த மக்களிடையே வந்து விட்டது, அவர்கள் செய்வதை பார்த்து பாமர மக்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர், மக்களிடம் நேரடியாக எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போட்டியிட்டது வருத்தம் அளிக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
19-நவ-202006:01:38 IST Report Abuse
ஆப்பு பணம் பாதுகாப்பா உள்ளது. ஆனா வாடிக்கையாளர் எடுக்க முடியாது. சூப்பர்.
Rate this:
Sridharan Venkatraman - Chennai,இந்தியா
19-நவ-202009:31:07 IST Report Abuse
Sridharan Venkatramanஅ க ஆ கா இ கி ஈ கீ உ கு ஊ கூ ........ (ஆப்பு ஐயா, எனக்கும் கருத்து போட தெரியுமே ..... )...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X