பொது செய்தி

இந்தியா

ஜோ பைடனுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், கொரோனா சவால்கள் குறித்தும், பருவநிலை மாற்றம் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். விரைவில் அவர் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். துணை அதிபராக இந்திய
PM Modi, wishes, Joe Biden, Kamala Harris

புதுடில்லி: அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், கொரோனா சவால்கள் குறித்தும், பருவநிலை மாற்றம் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். விரைவில் அவர் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரில் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி, ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜோ பைடனுடன் உரையாடியதாகவும், அதிபராக தேர்வானதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.


latest tamil news


மேலும் தனது பதிவில், இந்திய - அமெரிக்க உறவை மேலும் வலுவாக்க இருவரும் உறுதி பூண்டதாகவும், கொரோனா சவால்கள், பருவநிலை மாற்றம், இந்திய - பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசித்தோம் எனவும் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கமலாவின் வெற்றி, இந்திய அமெரிக்கச் சமூகத்தினருக்கு பெருமிதம் தரும் நிகழ்வு என பாராட்டி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-நவ-202008:36:03 IST Report Abuse
ஆப்பு பைடன் சர்க்கார் கமலா சர்க்காரா மாறினாலும் ஆச்சரியமில்லை.
Rate this:
Cancel
Vetri - Chennai,இந்தியா
19-நவ-202008:21:14 IST Report Abuse
Vetri நீங்க சப்போர்ட் பண்ண ஆளு புட்டுக்கிச்சி :)))
Rate this:
Cancel
19-நவ-202006:00:09 IST Report Abuse
ஆப்பு அப்கே பார் பைடன் சர்க்கார்.... அடுத்த அமெரிக்க பயணத்தின் போது பேசிட்டாப் போச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X