தமிழகத்தில் போட்டியிட ஓவைசி கட்சி திட்டம்

Updated : நவ 20, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (79)
Share
Advertisement
பீஹார் சட்டசபை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட, அசாதுதீன் ஓவைசியின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், 50 தொகுதிகளில் போட்டியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாதின், எம்.பி.,யாக உள்ளவவர் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர், ஓவைசி. இந்த லோக்சபா தொகுதியில் இருந்து, நான்கு முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் போட்டியிட ஓவைசி கட்சி திட்டம்

பீஹார் சட்டசபை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட, அசாதுதீன் ஓவைசியின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், 50 தொகுதிகளில் போட்டியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதின், எம்.பி.,யாக உள்ளவவர் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர், ஓவைசி. இந்த லோக்சபா தொகுதியில் இருந்து, நான்கு முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது லோக்சபாவில், இந்தக் கட்சிக்கு, ஓவைசி உட்பட, இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர். ஐதராபாதில் மட்டுமே செயல்பட்டு வந்த இந்தக் கட்சி, தேசிய அளவில் பிரபலமாகி வருகிறது.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், இரண்டு இடங்களில் வென்றது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில், ஏழு இடங்களில் வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.சமீபத்தில் பீஹார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், போட்டியிட்ட, 20 இடங்களில், ஐந்தில் வென்று அசத்தியது.

'பீஹாரில், ஆட்சியை பிடிக்க முடியாததற்கு, ஓவைசி கட்சி தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டதே காரணம்' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., கூட்டணி கூறி வருகிறது.ஓவைசி கட்சி தேர்தலில் போட்டியிடுவதால், பா.ஜ.,வுக்கே அதிகம் சாதகமாக உள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.அடுத்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக, ஓவைசி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் ஓட்டு இவருடைய கட்சிக்கு கிடைப்பதால், திரிணமுல் காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.இந்நிலையில், மேற்கு வங்கத்துடன், தமிழக சட்டசபைக்கு நடக்கும் தேர்தலிலும் போட்டியிட, ஏ.ஐ.எம்.ஐ.எம்., திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், 15 மாவட்டங்களில் உள்ள, 50 தொகுதிகளில் போட்டியிட, 'சர்வே' எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் நடக்கும், கட்சியின் செயற்குழுவில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
21-நவ-202016:59:07 IST Report Abuse
Davamani Arumuga Gounder அப்பன்னா.. இனிமேல் எங்களுக்கெல்லாம் ஓசி பிரியாணி, கஞ்சி இதெல்லாம் கிடைக்காதாக்கும்?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
20-நவ-202020:28:23 IST Report Abuse
bal இந்த ஆளை உள்ளே விடாதீர்கள்..ஏற்கனவே பிரியாணி சாப்பிடும் கூட்டம் நிறய இருக்கிறது...இவன் வென்ற இடங்களில் என்ன சாதிதான். ஹைதெராபாத் வெள்ளம்...இன்னும் வடியவில்லை...இவன் ஜெயிக்கும் இடமெல்லாம் எல்லோரும் முஸ்லிமாக மாற்றப்படுகிறார்கள்...ஏன் மதவாதிக்கு வோட்டு போடவேண்டும்...ஹிந்துவுக்கு வோட்டு போட்டாள் அது நம் நாட்டின் கலாச்சாரம்,
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-நவ-202005:42:53 IST Report Abuse
 Muruga Vel குஷ்பு ஜோதிகா இவுங்கள திமுகவில் சேர்த்து கொபசெ பதவி கொடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X