சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிலோ 1 ரூபாய்க்கு கூட வாங்க ஆள் இல்லை; ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்

Updated : நவ 19, 2020 | Added : நவ 19, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
தேனி: வெண்டைக்காய் வரத்து அதிகரிப்பால் கிலோ, 1 ரூபாய்க்கு கூட வாங்காததால் விரக்தி அடைந்த விவசாயிகள் முல்லை பெரியாற்றில் கொட்டினர்.தேனி மாவட்டம் தேனி ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதியில், 1,300 ஏக்கரில் வெண்டை சாகுபடி செய்துள்ளனர். வீரபாண்டியில் உள்ள காய்கறி ஏலக்கடைகளுக்கு தினமும், 20 டன் வெண்டை வருவதற்கு பதிலாக, 30 முதல், 35 டன் வரத்து ஏற்பட்டது. இதனால் விலை கடுமையாக சரிந்தது.
வெண்டைக்காய், ஆறு,  விவசாயிகள், விரக்தி

தேனி: வெண்டைக்காய் வரத்து அதிகரிப்பால் கிலோ, 1 ரூபாய்க்கு கூட வாங்காததால் விரக்தி அடைந்த விவசாயிகள் முல்லை பெரியாற்றில் கொட்டினர்.

தேனி மாவட்டம் தேனி ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதியில், 1,300 ஏக்கரில் வெண்டை சாகுபடி செய்துள்ளனர். வீரபாண்டியில் உள்ள காய்கறி ஏலக்கடைகளுக்கு தினமும், 20 டன் வெண்டை வருவதற்கு பதிலாக, 30 முதல், 35 டன் வரத்து ஏற்பட்டது. இதனால் விலை கடுமையாக சரிந்தது. நான்கு நாட்களுக்கு முன் கிலோ, 2 வீதம், 70 கிலோ மூட்டை, 140 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதில், 150 மூட்டை கள் ஏலம் போனது. 300 மூட்டைகள் வாங்க ஆளின்றி தேங்கியது.

கிலோ, 1 ரூபாய்க்கு கூட வாங்க ஆள் இல்லை. இதனால் விரக்தியில் விவசாயிகள் டிராக்டரில் கொண்டு வந்து ஆற்றில் கொட்டினர்.தேனியில் இருந்து கேரளாவிற்கு தினமும் அதிகமாக சென்ற காய்கறிகள் கொரோனா கட்டுப்பாடு கெடுபிடிகளால் குறைவாகவே அனுமதிக்கப்படுகிறது. இதுவும் முக்கிய காரணமாகும்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THAMIRAMUM PAYANPADUM THANGAM MATTUMALLA - india,இந்தியா
21-நவ-202009:59:45 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM THANGAM MATTUMALLA வளைகுடா நாடுகளிலி அதன் விலை எரநூரிரி நாற்பது என் ஏற்றுமதி சிஎயக்கூடாது
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
20-நவ-202022:37:23 IST Report Abuse
Murugan ஐரோப்பாவில் கிலோ 9 யூரோவிக்கும்மேலும் கிடைக்காமல் இந்திய மக்கள் பரிதவிக்கிறார்கள் .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-நவ-202016:30:02 IST Report Abuse
Endrum Indian யாரிடம் இவர்கள் கதை விடுகின்றார்கள்???அன்று டீவியில் பார்த்தது ஒரு லிட்டர் பாலை ஒரு கிணற்றில் கொட்டி இது போராட்டமாம். தண்டப்பசங்களா இதை காய வைத்து வற்றல் செய்து விற்றால் காசு கிடைக்காதா என்ன???எப்போ பார்த்தாலும் தரகர் அடிமை என்றால் இப்படித்தான் முடிந்தால் உழவர் சந்தைக்கு போ அங்கு விக்கும். இங்கு நான் வாங்குகின்றேனே எனக்கு வெண்டைக்காய் வாரத்திற்கு ஒரு முறையவாதது வேண்டுமென்று???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X