அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை

Updated : நவ 19, 2020 | Added : நவ 19, 2020 | கருத்துகள் (114)
Share
Advertisement
கரூர்: 'கோ பேக் மோடி' என்ற விளம்பரத்தை தி.மு.க., வினர் அழிக்கவில்லை எனில் பா.ஜ. வினர் அதை அழிப்பர்' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய பா.ஜ. அரசை கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்து வருகிறது. நவ.,10ல் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சேலம்- மதுரை புறவழிச்சாலை மேம்பால சுவற்றில் 'கோ பேக் மோடி' என
BJP, Annamalai, DMK, பாஜ, அண்ணாமலை

கரூர்: 'கோ பேக் மோடி' என்ற விளம்பரத்தை தி.மு.க., வினர் அழிக்கவில்லை எனில் பா.ஜ. வினர் அதை அழிப்பர்' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பா.ஜ. அரசை கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்து வருகிறது. நவ.,10ல் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சேலம்- மதுரை புறவழிச்சாலை மேம்பால சுவற்றில் 'கோ பேக் மோடி' என தி.மு.க. சார்பில் விளம்பரம் எழுதப்பட்டது. மேலும் ஈரோடு சாலை, வெங்கமேடு உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து நவ.,11ல் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவசாமி சார்பில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நவ.,16ல் அரவக்குறிச்சி அருகே தடாகோவில் பகுதியில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.


latest tamil news


இதில் மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசிய போது 'கோ பேக் மோடி' என்று எழுதிய விளம்பரங்களை நவ., 24க்குள் தி.மு.க., வினர் அழிக்க வேண்டும். அழிக்கவில்லை என்றால் நாங்கள் சென்று அழிப்போம். அதில் 'ஐந்து கட்சி அமாவாசை' 'சுடலை ராஜா' என்றும் எழுதுவோம். பிரதமர் மோடிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கவில்லை என்றால் கரூரில் அரசியல் செய்ய முடியாது. நேர்மையாக அரசியல் செய்ய வாங்க' என்று தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்திபாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதுவரை உள்ளூர் அரசியல் பற்றி பேசாமல் இருந்த அண்ணாமலை தி.மு.க. வையும் செந்தில்பாலாஜியை குறி வைத்து பேச தொடங்கியுள்ளார். இருப்பினும் இதுவரை 'கோ பேக் மோடி' என்ற சுவர் விளம்பரங்களை தி.மு.க.வினர் அழிக்கவில்லை.அண்ணாமலை கூறியபடி நவ. 25ல் சுவர் விளம்பரங்களை அழிக்க பா.ஜ.,வினர் தயாராகி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VeeJay - Austin,யூ.எஸ்.ஏ
25-நவ-202018:12:32 IST Report Abuse
VeeJay மோடி தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை. இங்கு இருப்பவர்கள் தவறு செய்யாமல் பார்த்து கொண்டால் போதும்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-நவ-202012:29:10 IST Report Abuse
Malick Raja வரிந்து கட்டிக்கொண்டு .. கருத்தெழுதுபவர்களே .. இந்த நல்லவர்கள் ஆட்சியில் பெட்ரோல் ரூ .100.ஐ தொடுங்காலம் வெகு விரைவில் என்பதையும் சொல்லிவிடுங்கள் .. இவர்கள் நாடாள தெரிந்தவர்கள் .. அதனால்தான் பொருளாதாரம் மைனஸ் (-) வளர்ச்சியில் வெகுவாக வளர்ந்து கொண்டிருக்கிறது .. அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பும் நல்ல வளர்ச்சி .. இப்படி இருக்கையில் அண்ணாமலை அண்ணாச்சி கூவுவதெல்லாம் கூலிக்குதானே ..
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
19-நவ-202019:46:11 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஆர்.கே. நகர் பை எலெக்க்ஷனில் மருதுவின் டெபாசிட் காலி பண்ணியது ஞாபகம் இல்லையா? (பி.கு. ஐந்து முறை பதவியில் இருந்த திமுக விற்க்கே இந்த கத்தி). பாவம் திமுக. தமது அரசை கலைத்த இந்திராவையே "நேரு மகளே வா, நிரந்தர ஆட்சியை தா" என்று கலைஞ சொன்னதுபோல், gobackmodi என்பது comebackmodiji என்று மாறும் நாள் தொலைவில் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X