இடதுசாரிகளின் ஆதிக்கம் மிகுந்த, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சுவாமி விவேகானந்தர் சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இதன் மூலம் அவர், சொல்ல விரும்புவது என்ன?
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி
'சுவாமி விவேகானந்தர், எல்லாருக்கும் பொதுவானவர்; இந்தியாவின் ஆன்மா என்பதை அங்குள்ள மரமண்டைகளுக்கு உணர்த்துவதற்காக வைத்திருப்பார்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேட்டி.
கூட்டுறவு வங்கியின் ஊழியர்கள் சிலர் எஜமான மனநிலையுடன் நடந்து கொள்வதாக, சில புகார்கள் வந்துள்ளன. கடினமான தலையீடு கூட்டுறவுத் துறையில் அனுமதிக்கப்படவில்லை. கூட்டுறவுத் துறைக்கு, ஊழல் ஏற்றதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிரானது எங்கள் அரசு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
- கேரள முதல்வர் பினராயி விஜயன்
'சும்மா சொல்லாதீங்க; தங்க கடத்தல் வழக்கில், உங்கள் உதவியாளர்களே சிக்கியுள்ளனர்...' என்பதை நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு.

நாட்டிலேயே, தமிழகத்தில் தான், சட்டம் - ஒழுங்கு அமைதியாக உள்ளது. ஆனால், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன், வீட்டில் பதுங்கி இருந்தபடி, சட்டம் - ஒழுங்கு சரியில்லை என கூறத் தேவையில்லை.
- அமைச்சர் ஜெயகுமார்
'அவர் பதுங்கியிருக்கவில்லை. 'பிக்பாஸ்' ஷூட்டிங்கில், பல படங்கள் தயாரிப்பு வேலையில் மும்முரமாகத் தான் இருக்கிறார்...' என, ஜாடை மாடையாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி.
அ.தி.மு.க., ஆட்சியில், எண்ணற்ற வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெ., தொடர்ந்து, இரண்டாவது முறை ஆட்சி செய்தார். மூன்றாவது முறையாக தற்போது மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமைய உள்ளது.
- தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
'பீஹாரில் தொடர்ந்து, நான்காவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிதிஷ் குமாருக்கு போட்டியாக வந்து விடுவீர்கள் போலிருக்கிறதே...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, அதிக அதிகாரம் படைத்தவரா; சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா... அவர் மீது கூறப்படும் புகார்களுக்கு, பதவியிலிருந்து விலகி, பதிலளிக்க வேண்டும்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்
'ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசியல் தலைவர்கள், இந்த விவகாரத்தில், முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE