அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசின் சாதனைகளை ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை: முதல்வர் பழனிசாமி

Updated : நவ 19, 2020 | Added : நவ 19, 2020 | கருத்துகள் (96)
Share
Advertisement
சேலம்: தமிழக அரசு சாதனை படைப்பதை தி.மு.க., தலைவர் ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.சேலம் மாவட்டம் நங்கவள்ளி வனவாசியில் நூறு வறண்ட ஏரிகளுக்கு நீர் ஊற்று மூலம் நீர் வழங்கும் திட்டம், வனவாசி அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விடுதி கட்டடங்கள் மற்றும் முடிவுற்ற திட்ட பணிகள் என 291.94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர்
ஸ்டாலின், திமுக, முதல்வர், பழனிசாமி, முதல்வர்பழனிசாமி, தமிழக அரசு,

சேலம்: தமிழக அரசு சாதனை படைப்பதை தி.மு.க., தலைவர் ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி வனவாசியில் நூறு வறண்ட ஏரிகளுக்கு நீர் ஊற்று மூலம் நீர் வழங்கும் திட்டம், வனவாசி அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விடுதி கட்டடங்கள் மற்றும் முடிவுற்ற திட்ட பணிகள் என 291.94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது: யாரும் கோரிக்கை வைக்காமலேயே மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எனது எண்ணத்தில் உதித்தது. தமிழக அரசின் நடவடிக்கையால், ஏழை எளிய மாணவர்கள் டாக்டர் ஆகியுள்ளனர். நான் முதல்வரான பிறகு, தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 1,900 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைத்துள்ளன.

தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால், குடிநீர் பிரச்னை தீர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்தன. தமிழக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தன. விமர்சனங்களை தவிடுபொடியாக்கி கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம்.


latest tamil newsஎன்னை பற்றி ஏதாவது நினைத்தால் தான் ஸ்டாலினுக்கு தூக்கம் வரும். ஒரு நாள் கூட எனது அரசு தாங்கது என ஸ்டாலின் சவால் விடுத்தார். மூன்றரை ஆண்டுகளை கடந்து எனது ஆட்சி வெள்ளிகரமாக நடக்கிறது.கொரோனா காலத்தில் உற்பத்திபாதிக்கப்படவில்லை. முதலீடு அதிகளவில் ஈர்க்கப்பட்டன. தமிழக அரசு சாதனை படைப்பதை ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை.எதிர்கட்சிகள் கெட்ட எண்ணத்தோடு செயல்படகூடாது மக்கள் நன்மையை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதை மட்டும் செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan rajagopalan - Chennai,இந்தியா
19-நவ-202022:01:04 IST Report Abuse
Kannan rajagopalan என்ன பண்ணுவார் எதிர்கட்சி தலைவர். அப்பா மாதிரி எழுத வராது. எழுதி கொடுத்ததை சரியா படிக்க வராது. காலத்தின் கட்டாயம். கட்சிக்காக, கிஷோருக்காக தினம்அறிக்கை விடணும். ஆல்இந்தியா மாதிரி தமிழ் நாட்டிலும் மூன்றாமிடம் தேர்தலுக்குப்பின் உறுதி.அதுக்கப்புறம் இருக்கவே இருக்கு கல்யாண வீடு கருமாதி வீடுகளில் அரசியல் பேச்சு.
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
19-நவ-202021:53:08 IST Report Abuse
Truth Triumph திருடர்கள் முன்னேற்ற கழக உடன் பிறப்புகள் புறங்கையை நக்கி பழகி பழகி தலைவன் , மகன், பேரன் , கொள்ளுப்பேரன் என தலைமுறை அடிமை சாசனம் எழுதி அதை அனுதினமும் மான வெட்கம் இல்லாமல் செயலில் காட்டுபவர்கள் .... தற்போதய தலைவன் தத்தி என்ற போதும் திருட்டு புத்தி கை கொடுக்கும் புறங்கை நீட்டப்படும் என்ற நம்பிக்கையில் அடிமைத்தனத்தை விட மாட்டார்கள் மக்கள் இதை உணர்ந்துவிட்டார்கள் ... கொத்தடிமை மீட்பு சுயமாக நடக்காவிட்டால்... காலம் மீட்கும் ....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-நவ-202019:37:32 IST Report Abuse
sankaseshan இனிமேல் சுடலை வாழ்நாள் பூராவும் அறிக்கை விட்டே பொழுதை கழிக்க வேண்டியதுதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X