சென்னை: ''ஆழ்கடல் பகுதியிலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புகுத்தும், மத்திய அரசை எதிர்க்காமல், தமிழக அரசு பயந்து நிற்கிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட துணைச் செயலர் டி.சத்தியேந்திரன் படத்திறப்பு நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அவர் பேசியதாவது:தமிழக கடல் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுக்க, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காவிரி படுகையில் மட்டும், ஆறு வட்டார பகுதிகளில், ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதுவும் முதல் முறையாக, ஆழ்கடல் பகுதியில், இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.நிலப்பரப்பில், விளை நிலங்களை பாதிக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு, தற்போது, ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புகுத்துகிறது. இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம், ௧ கி.மீ., - ௨ கி.மீ., அல்ல, மொத்தம், 4,௦௦௦ சதுர கி.மீ.,க்கு மேல் அனுமதிக்கப்படுகிறது.
மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, இதுவரை காவிரி டெல்டாவில் உள்ள அ.தி.மு.க., அமைச்சர்கள் யாரும் வாயே திறக்கவில்லை.ஏன் முதல்வரோ, தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை; மத்திய அரசுக்கு, தமிழக அரசு பயந்து நிற்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்டங்கள் பிரிப்பு
மதுரை வடக்கு, மதுரை தெற்கு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக, பொன்.முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்
மதுரை மத்தி, மதுரை மேற்கு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
'ரூ.25 கோடி டெண்டர் ரூ.900 கோடி ஆனது ஏன்?'
'இருபத்தி ஐந்து கோடி ரூபாய் டெண்டரை, பத்து முறை தள்ளி வைத்து, 900 கோடி ரூபாயாக உயர்த்தியது ஏன்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
தேசிய நெடுஞ்சாலையில், அதிவிரைவாக செல்லும், வாகனங்களின் பதிவு எண்களை கண்காணிக்கும், 'கேமரா' அமைப்பதற்கு, போக்குவரத்து துறை வெளியிட்ட, 'டெண்டர்' அறிவிப்பு, ௧௦ முறைக்கு மேல் திறக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
வெறும், 25 கோடி ரூபாயாக இருந்த, டெண்டர் மதிப்பு, இந்த திருத்தங்கள் வாயிலாக, 900 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. டெண்டர் ஊழல்கள், போக்குவரத்துத் துறையை ஆட்டிப் படைக்கின்றன.
தமிழக வரலாற்றில், 2016 முதல், 2020 வரை, நான்கு ஆண்டுகளில், ஆறு அரசு செயலர்களை கண்ட துறை என்றால், அது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் போக்குவரத்து துறையாக தான் இருக்கும். பத்து முறை தள்ளி வைக்கப்பட்ட, தேசிய நெடுஞ்சாலைகளில், கேமரா அமைக்கும் டெண்டரை, மக்களின் பாதுகாப்பு கருதி, உடனே ரத்து செய்ய வேண்டும். புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும், மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், முதல்வர் இந்த டெண்டர் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE