லெபனான், பாகிஸ்தான், ஜோர்டன், மொராகோ உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்துவரும் நிலையில் அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை மக்களை இன்னும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது குளிர்காலம் துவங்கி விட்டதால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கெய்ரோ நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் கிழக்கு மெடிட்டரேனியன் பகுதியில் இயக்குனர் அகமது அல் மண்டரி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் லெபனான், பாகிஸ்தான், ஜோர்டன், மொராக்கோ உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வைரஸின் இரண்டாவது அலை தாக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட இந்த நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். ஆனால் சமூக விலகலை கடைபிடிக்காமல் முகக்கவசம் அணியாமல் பலர் உள்ளது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்தார். இந்த நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்தார். இதனால் இந்த நாட்டு மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அரசு இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸின் இரண்டாவது அலை முதல் அலையைப் போன்று மிகவும் ஆபத்தான ஒன்று. முதல் அலை எந்த வகையிலும் இரண்டாவது அலைக்கு சளைத்தது அல்ல. ஆனால் பாகிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. திருமண கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது ஆபத்தானது என்று அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE