தீவிரவாதிகள் போட்ட சதி முறியடிப்பு!

Updated : நவ 19, 2020 | Added : நவ 19, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரை தகர்க்க, பயங்கரவாதிகள் போட்டிருந்த சதித் திட்டத்தை, பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த வந்த நான்கு பயங்கரவாதிகளை, பாதுகாப்புப் படையினர், நேற்று சுட்டுக் கொன்றனர். ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத கும்பலின் ஊடுருவல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அவற்றை, நம் எல்லைப் பாதுகாப்புப்
தீவிரவாதிகள் போட்ட சதி...

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரை தகர்க்க, பயங்கரவாதிகள் போட்டிருந்த சதித் திட்டத்தை, பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த வந்த நான்கு பயங்கரவாதிகளை, பாதுகாப்புப் படையினர், நேற்று சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத கும்பலின் ஊடுருவல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அவற்றை, நம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சாமர்த்தியமாக முறியடித்து, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடியில், வாகனங்களை சோதனை செய்யும் பணியில், காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து, நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அதிகாலை, 5:00 மணிக்கு, அந்த பகுதியில் வந்த ஒரு லாரியை, பாதுகாப்புப் படையினர் வழிமறித்து நிறுத்தினர். பீதியடைந்த டிரைவர், லாரியில் இருந்து இறங்கி தப்பியோடினார்.
லாரியை பரிசோதிக்கச் சென்ற பாதுகாப்புப் படையினர் மீது, அதில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்தினர்.

கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும், பயங்கர தாக்குதல் நடத்தினர். இதற்கு, பாதுகாப்புப் படையினர், தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்பிற்கும் இடையில் நடந்த சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என, தெரிய வந்துள்ளது.

அவர்கள் வைத்திருந்த, ஏ.கே., ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சண்டையில், இரண்டு போலீசார் காயமடைந்தனர். தப்பியோடிய டிரைவரை தேடும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து, ஸ்ரீநகர் போலீஸ் ஐ.ஜி., விஜயகுமார் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீரில் நடக்க இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை சீர்குலைக்க, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றவே, காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு, இந்த நான்கு பயங்கரவாதிகளும் லாரியில் வந்துள்ளனர். பாதுகாப்புப் படையினர், அவர்களை வழியில் சுட்டு வீழ்த்தியதால், பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.ஜம்மு - காஷ்மீரில், வரும், 28ல் துவங்கி, எட்டு கட்டங்களாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


மறுப்பு!இதற்கிடையே, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பயங்கரவாதிகள் பயிற்சி பெறும் இடங்களில், இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதாக, நேற்று தகவல் வெளியானது. ஆனால், இந்திய ராணுவ அதிகாரி பரம்ஜித் சிங், இந்த தகவலை மறுத்துள்ளார்.


துணை நிலை கவர்னர் சூளுரைபயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் காயமடைந்து, சிகிச்சைப் பெற்று வரும் இரண்டு போலீசாரை, துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, நேற்று மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து, நலம் விசாரித்தார். இதன்பின், அவர் கூறியதாவது:
நம் பாதுகாப்புப் படடையினரின் துணிச்சலுக்கு, தலை வணங்குகிறேன். ஒட்டுமொத்த நாடும், உங்களை நினைத்து பெருமைப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அமைதியான எதிர்காலத்தை உருவாக்கித் தர, யூனியன் பிரதேச நிர்வாகமும், பாதுகாப்புப் படையினரும், இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202013:41:50 IST Report Abuse
Balaji Radhakrishnan All terrorists group from outside and inside india should be destroy. Our indian army will do definitely.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
20-நவ-202012:24:45 IST Report Abuse
Rameeparithi தீவிரவாதத்தின் முதுகெலும்பை உடையுங்கள் ... ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
20-நவ-202012:00:01 IST Report Abuse
வல்வில் ஓரி புத்தகத்தில் சொன்னதய் செஞ்சா தப்பாய்யா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X